×

தா.பழூரில் கடல்போல் காட்சியளித்த எமனேரி மாயம் தூர்வாராததால் கருவேல மர காடானது கண்டுகொள்ளாத அதிகாரிகள்

தா.பழூர்,மார்ச் 6: தா.பழூர் பகுதியில் 30 ஏக்கரில் கடல்போல் காட்சியளித்த எமனேரி, தூர்வாரப்படாததால், கருவேல மர காடானது. கண்டு கொள்ளாத அதிகாரிகளால் ஏரி இருந்த இடமே தெரியாமல் உள்ளது. அரியலூர் மாவட்டம்  தா.பழூர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாததால் இந்த ஏரி நீர் நிலை தூர்வாரப்படாமல் கிடப்பில் கிடந்ததால் இதனை சுற்றிலும் ஆக்கிரமிப்புகளும் கருவேல மரங்கள் சூழ்ந்து ஏரியே காணாத வண்ணம் உள்ளது. இந்த பகுதியில் சுற்றி உள்ள 8 கிராம பொதுமக்கள் இந்த எமனேரியில் இருந்து நீர் கொண்டு சென்று பயன்பாட்டிற்கும் மற்றும் ஏரியில் குளிப்பதற்கும் கால்நடைகள் பயன்பாட்டிற்கும் பல்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கு வாழ்வாதாரமாக இருந்தது. இந்த ஏரி தற்போது காணாமல் போன நிலையில் உள்ளது. எமனேரி மொத்த பரப்பளவு சுமார் 30 ஏக்கர் ஆகும்.

இதன் அழகு குறைந்து ஆர்ப்பரிக்கும் அலைகள் ஓய்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தா.பழூர் பகுதியின் மேற்கே உள்ள நடுவலூர், சுத்தமல்லி, பருக்கல், மைக்கேல்பட்டி போன்ற பல்வேறு பகுதியில் இருந்து தா.பழூர் நோக்கி விவசாயம் செய்ய மற்றும் அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்காகவும்  தா.பழூர் கடைவீதிக்கு வருபவர்கள்  இந்த ஏரியின் சுற்றியுள்ள மரத்தடி நிழலில் ஓய்வு எடுப்பர். இந்த ஏரியில் குளித்து தங்களது சோர்வை போக்கி கொண்டு செல்வதும் உண்டு, வியாபாரிகள், விவசாயிகள் என அனைவரும் பயன்படுத்தி வந்த ஏரி  இன்று கருவேல மரங்கள் சூழ்ந்து ஆக்கிரமிப்புகள் மண்டிக்கிடக்கின்றன. இந்த ஏரியில் நீர் நிறைந்திருந்தால் தா.பழூர் சுற்றி உள்ள பகுதியில் உள்ள கினறுகளில் நீர் நிலைந்திருக்கும். இந்த எமனேரியில் நீர் நிரம்பிய பின் இதன் கீழ் பகுதியில் உள்ள வன்னானேரி என்ற ஏரிக்கு நீர் நிரம்பி பின் அதன் கீழ் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசனம் பெற்று வந்தது.

இது குறித்து சமூக ஆர்வலர் கணபதி கூறும்போது, தா.பழூர் பகுதிகளில் ஐந்து ஆறு குளங்கள் இருந்தாலும் இந்த எமன் ஏரி விட பெரிய ஏரி எதுவும் கிடையாது என்றும் அப்படிப்பட்ட இந்த ஏரி தற்போது எங்கு உள்ளது என்று தேடிப் பார்த்தால் கூட தெரியாத அளவிற்கு உள்ளது. அதன் நிலைமை இந்நிலையில் 30 வருடங்களாக விவசாயம் பொய்த்துப்போய் உள்ள நிலையில் அங்குள்ள  நிலங்களை விவசாயிகள் மனைகளாக மாற்றி விற்பனை செய்ய தயாராகி விட்டனர். பல ஆண்டுகளாக நீர் இல்லாத காரணத்தினால் அதன் சுற்றி கரையில் உள்ள பனை மரம், புளிய மரம் என அழகாக இருக்கும். பல வகையான பறவைகளும் வந்து அமர்ந்து இருக்கும் சாலையில் செல்பவர்கள் வெயில் நேரங்களில் களைப்பு தெரியாமல் இருக்க இந்த ஏரியில் குளித்து விட்டு அருகில் உள்ள மரத்தடியில் படுத்து ஓய்வு எடுத்து செல்வார்கள் இப்படிப்பட்ட அந்த ஏரியை காணவில்லை ஏரியின் நீர் இல்லாததால் மரங்கள் பட்டுப் போய் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன ஏரியை தூர் வாரி கரையை பலப்படுத்தி கரையில் மரங்கள் அமைத்து ஏரியை மீண்டும் அழகு கொஞ்சும் ஏரியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...