×

சாம்பல் புதன் அனுசரிப்பு கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடக்கம்

திங்கள்சந்தை, மார்ச் 6 :   கிறிஸ்தவர்களின் தவக்காலம்  இன்று சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. உலகமெங்–்கும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடும் விழாக்களில் மிகவும் முக்கியமானது ஈஸ்டர் பெருவிழாவாகும்.இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3ம் நாள் உயிர்த்தெழுந்ததே ஈஸ்டர் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு முன்னர் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பார்கள்.  இந்த நாட்களில் ஆடம்பர விழாக்கள் நடத்துவதில்லை. உணவு உட்கொள்வதிலும் கட்டுப்பாட்டை கடைபிடிக்கின்றனர். அசைவ வகைகளை தவிர்த்து எளிமையான உணவு உண்பார்கள். தவக்காலத்தில் ஒரு சந்தி கடைபிடிப்பார்கள். தவக்காலத்தின் தொடக்க நாளான சாம்பல புதன் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று காலை அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெறும். பங்கு அருட்பணியாளர்கள் ஊதா நிற  உடை அணிந்து திருப்
பலிக்கு தலைமை வகிப்பார்கள்.

திருப்பலியின்போது கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று பயன்படுத்திய குருத்தோலைகளை எரித்து அந்த சாம்பலை  பக்தர்கள் நெற்றியில் மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள் என்று கூறி சிலுவை அடையாளமாக வரைவார்.  குழித்துறை மறைமாவட்ட பேராலயமான திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயத்தில்  ஆயர் ஜெரோம்தாசும், கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் ஆயர்   நசரேன் சூசை ஆகியோர் பங்கேற்கின்றனர். காரங்காடு புனித ஞானப்பிறகாசியார் ஆலயத்தில் அருட்பணி விக்டர், கண்டன்விளை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் அருட்பணி சகாய ஜெஸ்ட்ஸ், கொன்னக்குழி விளை வியாகுல அன்னை ஆலயத்தில் அருட்பணி பிரான்சிஸ் சேவியர், ஆலன்விளை லூர்து அன்னை ஆலயத்தில் அருட்பணி பிரைட் சிம்சராஜ், முரசங்கோடு ஆலயத்தில் அருட்பணி ஜார்ஜ் மற்றும் தக்கலை புனித எலியாசியார் ஆலயத்தில் மரிய டேவிட், வட்டம் புனித அந்தோணியார் ஆலயத்தில் அருட்பணி சகாயதாஸ், முக்கலம்பாடு வியாகுல அன்னை ஆலயத்தில் அருட்பணி ஜெஸ்டின் ஜேம்ஸ்,

கல்குறிச்சி சூசையப்பர் ஆலயத்தில் அருட்பணி ஜாண் சாமுவேல், அப்பட்டுவிளை சூசையப்பர் ஆலயத்தில் அருட்பணி அலோசியஸ், சங்கான்கடை புனித அந்தோணியார் ஆலயத்தில் அருட்பணி ஜெயப்பிரகாஷ் அருட்பணி மரிய வில்லியம், மாடத்தட்டுவிளை செபஸ்தியார் ஆலயத்தில் அருட்பணி ஜெயக்குமார், அப்பட்டுவிளை அந்தோணியார் ஆலயத்தில் அருட்பணி சேகர் மைக்கேல் தலைமையில் நடக்கிறது. இதேபோன்று சிஎஸ்ஐ ஆலயங்கள், மலங்கரை  கத்தோலிக்க ஆலயங்கள், பெந்தகொஸ்தே சபை  ஆகியவைகளிலும் சாம்பல் புதன் புனித நிகழ்ச்சி நடக்கிறது. குருத்தோலை ஞாயிறு விழா ஏப்ரல் 14ம்தேதியும், ஏப்ரல் 18 புனித வியாழன் அன்று இயேசுவின் இறுதி இரா உணவு நிகழ்ச்சியும், 19ம் தேதி புனித வெள்ளி சடங்குகளும், 20ம்தேதி புனித சனி திருவிழிப்பு திருச்சடங்குகளும், 21ம் தேதி ஈஸ்டர் விழாவும் கொண்டாடப்படுகிறது.

Tags : Lenten ,Christians ,
× RELATED மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்துடன் சேர்க்க கோரிக்கை