×

பொதுத்தேர்வு துவங்கியதால் கூம்பு ஒலி பெருக்கி வைக்க தடை

ஈரோடு, மார்ச் 1:அரசு பொதுத்தேர்வுகள் துவங்கி உள்ளதால் கோயில் திருவிழாக்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில் திருவிழாக்கள் நடந்து வருகிறது. 15 நாட்களுக்கு மேல் நடக்கும் இந்த திருவிழாக்களில் தினமும் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதற்காக, ஆங்காங்கே கூம்பு வடிவ ஒலிபெருக்கி வைக்கப்பட்டு சினிமா பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது. இதனால், பள்ளி மாணவ, மாணவியர் தேர்வுக்கு படிக்க முடியாமல் அவதிக்குள்ளாவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தற்போது பிளஸ் 2 தேர்வு துவங்கி உள்ள நிலையில் அதிக சத்தத்துடன் சினிமா பாடல்கள் ஒலிபரப்பப்படுவதால் மாணவர்களின் கவனம் சிதறுவதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறைக்கு புகார்கள் சென்றது.

இதையடுத்து கூம்பு வடிவ ஒலிபெருக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு  மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. கோயில் திருவிழா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பாக்ஸ் வடிவ ஒலிபெருக்கி மட்டுமே வைக்க வேண்டும். அதிலும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் சத்தம் வைக்க கூடாது. திருவிழாக்களில் தடையை மீறி கூம்பு வடிவ ஒலிபெருக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் நலன் கருதி இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என எஸ்பி சக்தி கணேசன் கூறி உள்ளார்.

Tags : Prohibition ,examination ,
× RELATED கள்ளச்சாராயம் விற்றவர் கைது