×

இந்திரா காந்தி கல்லூரியில் விவிபாட் செயல்விளக்கம்

புதுச்சேரி, பிப். 28: புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் விவிபாட் இயந்திரத்தின் செயல்முறை விளக்க நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் குமரன் தொடங்கி வைத்தார். துணை தாசில்தார் மற்றும் தேர்தல் சிறப்பு அதிகாரி கணேசன் கலந்து கொண்டு, விவிபாட் இயந்திரம் செயல்படும் விதத்தை ஆசிரியர்களும், மாணவர்களும் விளக்கி கூறினார். தொடர்ந்து மாதிரி வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் வாக்குச்சாவடிக்குள் ஒரு வாக்காளர் நுழைவது முதல் அவர் தன் வாக்கை எவ்வாறு பதிவு செய்கிறார் என்பது வரையிலான செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் முதல்முறை வாக்களிக்க உள்ள பல மாணவர்கள் எளிதில் வாக்குச்சாவடியின் சூழலை அறிந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை என்எஸ்எஸ் அலுவலகர் சதீஷ்குமார் செய்திருந்தார்.

Tags : Vivipat ,demonstration ,Indira Gandhi College ,
× RELATED விவசாயிகளுக்கு உரக்கட்டு செயல்விளக்க பயிற்சி