×

தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை விவரம் கணக்கெடுக்க எஸ்பி.,உத்தரவு

தர்மபுரி, பிப்.28: தர்மபுரி பிரேத பரிசோதனை கூடத்தில், சடலங்களை கணக்கிட பெண் போலீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பிரேத பரிசோதனை கூடம் உள்ளது. இந்த பிரேத பரிசோதனை கூடத்தில், ஆண்டுக்கு 800க்கும் மேற்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. மாவட்டத்தில் தினமும் தற்கொலை, விபத்து என சுமார் 10க்கும் மேற்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தர்மபுரி எஸ்பி மகேஸ்குமார், அரசு மருத்துவமனையில் தினமும் பிரேத பரிசோதனை செய்யப்படும் சடலங்களின் எண்ணிக்கை, எப்படி உயிரிழந்தார்கள் மற்றும் அவர்களின் விபரங்களை சேகரிக்க உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஒரு பெண் போலீசையும் நியமனம் செய்துள்ளார்.

Tags : SBI ,Dharmapuri ,state hospital. ,
× RELATED செல்போன் திருடிய வாலிபர் கைது