×

விடுதி மாணவர்களுக்கு தொழில் நெறி பயிற்சி

தர்மபுரி, பிப்.28: தர்மபுரி மாவட்ட விடுதி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தொழில்நெறி பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தொழில்நெறி பயிற்சி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் மகேஸ்வரி வரவேற்றார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமிர்பாஷா முன்னிலை வகித்தார்.

 முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குனர் மேஜர் பிரபாகர், திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராதிகா ஆகியோர், முப்படைகளில் வேலைவாய்ப்பு, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு பின் என்ன படிக்கலாம் என்று பேசினர். உதவியாளர் சிவம் நன்றி கூறினார்.

Tags : host students ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா