×

அரியலூர் அருகே பாலக்கரையில் மின்மோட்டார் பழுதால் குடிநீரின்றி மக்கள் அவதி

அரியலூர்,பிப்.27: அரியலூர் அருகே பாலக்கரை கிராமத்தில் மின் மோட்டார் பழுது  நீக்கி மினிடேங்க் மூலம் குடிநீர் வினியோகிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் ஊராட்சிக்கு உட்பட்டது பலக்கரை கிராமம். இக்கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாலக்கரை அரியலூர் சாலையில் ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட சின்டக்ஸ் மினி டேங்க் ரூ 2.75 லட்சம் மதீப்பீட்டில்  கடந்த -2015ம்  ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. இதில் பாலக்கரை கிராம மக்கள் குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீரை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் மினிடேங்க் அருகில் உள்ள மின்மோட்டார் பலமாதங்களாக பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பஞ்சாயத்து நிர்வாகத்திடம் சென்று புகார் கூறினால் அலுவலர்கள் யாரும் கண்டுகொள்வது இல்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு அப்பகுதி மக்கள் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து  மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்களும்,சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ariyalur ,Balakar ,
× RELATED அதிமுக மாஜி எம்எல்ஏ காரில் ரூ.50ஆயிரம் திருட்டு