×

வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை வேளாண் பயிற்சி

 

தா.பழூர், மே18: வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை வேளாண் குறித்து பயிற்சி நடைபெற்றது. தஞ்சாவூர் ஈச்சங்கோட்டை ,டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை யத்தில் நான்காம் ஆண்டு இளங்கலை வேளாண்மை படித்து வரும் மாணவர்கள் தங்களது கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்திற்கு விருத்தாசலத்திலுள்ள மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த பயிற்சியை டாக்டர் இலக்குவன் மற்றும் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, அரியலூரில் உள்ள கிரீடு -வேளாண் அறிவியல் மையத்திற்கு வருகை தந்தனர். மையத்தில் அங்கக வேளாண்மை பயிற்சியில் பங்கேற்றனர். கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் மாணவர்களுக்கு வேளாண் தோட்டக்கலை துறை தொழில்நுட்ப வல்லுநர் ராஜா ஜோஸ் லின், பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் அசோக்குமார் அறிவியல் மையத்தின் செயல்பாடுகள் மற்றும் இயற்கை வேளாண்மை பற்றிய பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பயிற்சியில் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், செயற்கை விவசாயம் மூலம் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இடுபொருளான பஞ்சகாவியா, அமிர்த கரைசல், மீன் அமினா அமிலம், பூச்சி விரட்டிகள், ஐந்திலை கரைசல் ஆகிய இடுபொருள் தயாரிப்பு பற்றி விளக்கமாக பயிற்சி பெற்றனர். மேலும் சில்பாலின் பைகொண்டு மண்புழு உரம் தயாரிப்பு பற்றியும் அவற்றின் பயன்கள் பற்றியும் பயிற்சி பெற்றனர்.இதில் வேளாண் கல்லூரி மாணவர்களான சுபல் ,சுடலையாண்டி, சுவாமிநாதன், திருமாவளவன், வேந்தன், விஜயராகவன், விக்ரம், விஷ்ணு சங்கர், மற்றும் விஷ்ணு பாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை வேளாண் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : College ,Tha. Palur ,Agriculture College ,Thanjavur Echangkottai ,Swaminathan Agricultural College ,Yat ,Natural Agriculture ,
× RELATED வேளாண் மாணவர்கள் கிராமப்புற மதிப்பீடு