×

மூதாட்டியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி டிஎஸ்பி அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டம்

தேன்கனிக்கோட்டை, பிப்.27:  தேன்கனிக்கோட்டை அருகே, மூதாட்டியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஎஸ்பி அலுவலகம் முன்பு மூதாட்டியுடன் பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி உறுதி அளித்த பின், மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே மாசிநாயகனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமப்பா. இவரது மனைவி குரம்மா (65). இவருக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டதால் குரம்மா தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும், ஆனந்தப்பா என்பவர் வீடு கட்டி வருகிறார். இதில், கடந்த 23ம் தேதி, குரம்மா வீட்டின் முன், கட்டுமான பொருட்களை ஆனந்தப்பா போட்டுள்ளார். அதற்கு என் வீட்டின் முன், எதற்காக பொருட்களை போட்டு உள்ளீர்கள் என கேட்டார். இதனால், குரம்மாவிற்கும், ஆனந்தப்பாவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில், ஆனந்தப்பாவின், மனைவி மஞ்சுளா கட்டையால் குரம்மாவை அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், தேன்கனிக்கோட்ைட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இது குறித்து குரம்மா கெலமஙங்கலம் போலீசில் புகார் செய்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், புகார் அளித்து 4 நாட்களை கடந்த நிலையில், நேற்று தலையில் கட்டுடன், மூதாட்டி குரம்மாவை அழைத்துக்கொண்டு மகன் மற்றும் மருமகள்கள், தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி அலுவலகம் முன், தாக்கியர்வர்களை கைது செய்யவும், நியாயம் கிடைக்கும் வரை செல்லமாட்டோம் என கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த டிஎஸ்பி சங்கீதா விரைந்து வந்து அவர்களை சாமதானம் செய்தார். அப்போது குரம்மாவின் மகள்கள் சரஸ்வதி, அருணாஜோதி ஆகியோர் கூறுகையில், எனது தாயாரை தாக்கிய ஆனந்தப்பா மற்றும் மஞ்சுளா மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று எங்களையும் ஆபாசமாக பேசினர். போலீசில் புகார் செய்து விட்டால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டுகின்றனர். கெலமங்கலம் போலீசில் புகார் செய்து 4 நாட்கள் ஆகியும், இது வரை யாரையும் கைது செய்யவில்லை. போலீசார் பாதிக்கப்பட்ட எங்களையே மிரட்டுகின்றனர் என டிஎஸ்பியிடம் புகார் மனு அளித்தனர். டிஎஸ்பி சங்கீதா என்னுடைய கவனத்திற்கு வந்த உடன், மூதாட்டியை தாக்கியவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். எனவே, மூதாட்டியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்றார். பின்னர் சமாதானம் அடைந்த குரம்மா குடும்பத்தினர் மூதாட்டியை அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Women ,darna fight ,DSP ,victims ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...