×

செங்கல் உற்பத்திக்கு அனல் மின் நிலைய சாம்பலை 20 சதவீதம் வழங்க வேண்டும்

தூத்துக்குடி, பிப். 27: அனல் மின் நிலையங்கள் 20 சதவீத நிலக்கரி சாம்பலை  செங்கல் உற்பத்திக்கு வழங்கிடவேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மாவட்ட அளவிலான நிலக்கரி சாம்பல் செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. மாநில செயலாளர் சசிதரன் தலைமை வகித்தார். கவுரவ ஆலோசகர் ராஜாமணி முன்னிலை வகித்து பேசினார். கூட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் தூத்துக்குடி தெர்மல் அனல் மின் நிலையம் 10சதவீத சாம்பலும்  என்டிபிஎல் அனல் மின் நிலையம் 8 சதவீத சாம்பலையும் உலர் சாம்பல் செங்கல் தொழிலுக்கு வழங்கியுள்ளன.

இது இரு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த அதிகாரிகள் நடப்பு ஆண்டில் 20 சதவீத உலர் நிலக்கரி சாம்பல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். எனவே வரும் நாட்களில் 20 சதவீத நிலக்கரி சாம்பலை அனல் மின் நிலையங்கள் வழங்க வேண்டும். மேலும் 2016ம் ஆண்டு முதல் தெர்மல் அனல் மின் நிலையமும், என்டிபிஎல் அனல் மின் நிலையமும் உலர் சாம்பல் எடுத்து செல்வதற்கு ஆகும் வாகன கட்டணங்களை அவர்களிடம் இருந்து பெற ஆவன செய்யவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.அடுத்த மாதம் 12ம் தேதி சேலத்தில் சங்க பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. மேலும் புதிய நிர்வாகிகள் தேர்வும் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்ளவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் அடைப்புகள் சரி செய்து தரப்படும்