×

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் அடைப்புகள் சரி செய்து தரப்படும்

தூத்துக்குடி, ஜூன் 9: தூத்துக்குடி மரக்குடி தெருவில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரி செய்து தரப்படும் என அமைச்சர் கீதாஜீவன் உறுதியளித்தார். தூத்துக்குடி மாநகராட்சி 40வது வார்டுக்கு உட்பட்ட மரக்குடி தெருவில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்து தர வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை விரைவில் சரி செய்து தருவதாக உறுதியளித்தார். இதில், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வட்டச் செயலாளர் டென்சிங், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின், திரேஸ்புரம் பகுதி தகவல்தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், பகுதி மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் கமலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் அடைப்புகள் சரி செய்து தரப்படும் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Minister ,Geethajeevan ,Marakudi Street, Thoothukudi ,Thoothukudi Municipal Corporation ,Marakudi Street ,Dinakaran ,
× RELATED மீளவிட்டான் சாலை விரிவாக்கப் பணி