×

அரசு புறம்போக்கு மலை குன்றில் காய்ந்த செடிகளுக்கு தீ வைப்பு

சூளகிரி, பிப்.26:  சூளகிரியில் உள்ள அரசு புறம் போக்கு மலைகுன்றில், காய்ந்த செடிகள், மரங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், பள்ளிக்கு பின்புறம் சுமார் 4 ஏக்கர் பரப்பில் அரசு புறம் போக்கு மலைக்குன்று உள்ளது. பாறைகள் மற்றும் செடி, கொடிகள் மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. தற்போது வெயில் காலம் என்பதால், செடி கொடிகள் யாவும் காய்ந்து காணப்படுகிறது. மேலும், கோரைப்புல் என அனைத்தும் காய்ந்து உள்ளது.

இதில் பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் இதர நாட்களில் மர்ம நபர்கள் சிலர், அத்துமீறி நுழைந்து மர்மநபர்கள் சீட்டாடுவது, மது அருந்துவது என பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்று காலை, அரசு புறம் போக்கு நிலத்தில் உள்ள மலை குன்று பகுதியில், மர்ம நபர்கள் சிலர், புகை பிடித்து தீயை மரம் மற்றும் காய்ந்த செடி, கொடிகள் மீது பற்றவைத்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தீ பற்றி எரிவதை கண்ட கே.கே நகர், முஸ்லிம் தெரு, விஐபி நகர் பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர், நீர்பாய்ச்சி தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் தீயில் செடி, கொடிகள் மற்றும் மரங்கள் எரிந்தன.

Tags : land ,hill ,country ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்..!!