×

கூட்டுறவு கடன் சங்க நிர்வாக குழுவை கலைக்கக்கோரி மனு

சிவகங்கை,  பிப். 26: காரைக்குடி அருகே நாட்டுச்சேரி களத்தூர் தொடக்க வேளாண்  கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு செய்த நிர்வாகக்குழுவை கலைத்துவிட்டு  தனி அலுவலர் நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில்  மனு அளிக்கப்பட்டது. விவசாயிகள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில்  கூறியிருப்பதாவது: நாட்டுச்சேரி களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கத்தில் பயிர் காப்பீடு இழப்பீட்டுத்தொகை வழங்குவதில் முறைகேடு  நடந்ததாக எழுந்த புகாரையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2017-2018 பிரதம மந்திரி பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்த  ஆயிரத்து 486 நபர்களில் முதற்கட்டமாக 537 நபர்களுக்கு வந்த இழப்பீடு தொகையில்  முறைகேடு நடந்ததையொட்டி சங்க செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் 2016-2017ம் ஆண்டு இன்சூரன்ஸ் இழப்பீட்டிலும் முறைகேடு  நடந்துள்ளது. அதேபோல் 2017-2018ம் ஆண்டில் ஆயிரத்து  486 உறுப்பினர்களில் 537 பேரின் இழப்பீடு தொகையில் கடந்த முறைகேடு மட்டுமே  விசாரிக்கப்பட்டது. எனவே மேற்கண்ட இரண்டு நிதியாண்டுகளில் நடந்த  முறைகேடுகள், அரசு தள்ளுபடியில் தகுதியில்லாத விவசாயிகளிடம் லஞ்சம்  பெற்றுக்கொண்டு அவர்களை சேர்த்தது, விவசாய நகைக்கடன் வழங்கியதில் நடைபெற்ற  முறைகேடு ஆகிய அனைத்து முறைகேடுகளையும் விசாரிக்க வேண்டும். முறைகேடு செய்த  நிர்வாகக்குழுவை முழுமையாக கலைத்துவிட்டு சங்கத்திற்கு தனி அலுவர் நியமனம்  செய்ய வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags : Co-operative Credit Association ,executive board ,
× RELATED உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து...