×

களைகட்டிய மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரி, ஜூன் 16: சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் உள்ள கலியுக மெய் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. நேற்று காலை கிராம மக்கள் ஊர்வலமாக வந்து அய்யனார் கோயிலை அடைந்தனர். அங்கு கோயில் காளைகளுக்கு வேஷ்டி துண்டு அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து கட்டுமாடுகளாக வயல்வெளிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்து விட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சிங்கம்புணரி மற்றும் சுற்றுக் கிராமங்களிலிருந்து ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை பிடித்தனர். இதில் பெரும்பாலான காளைகள் பிடிபடாமல் ஓடியது. ஏராளமானோர் மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனர்.

The post களைகட்டிய மஞ்சுவிரட்டு appeared first on Dinakaran.

Tags : Singampunari ,Kaliyuga Mei Aiyanar Temple Puravi Teku festival ,Branmalai ,Manjuviratu ,Ayyanar temple ,Weedy Manchuvirattu ,
× RELATED சித்தர் கோயிலில் அமாவாசை வழிபாடு