×

ரவுடிகள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்திய புதுச்சேரி காவல்துறை

புதுச்சேரி,  பிப். 26:  புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலையொட்டி ரவுடிகள் மீதான  கண்காணிப்பை முன்கூட்டியே காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. பாராளுமன்ற  தேர்தல் ெநருங்கிவிட்ட நிலையில் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல்  அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. இதற்கிடையே தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தேர்தல்  ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த 23, 24ம்தேதிகளில் சிறப்பு  முகாம்களை நடத்தப்பட்டு, புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணி நடந்து  வருகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிகளில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி  வருகிறது. இதற்கான ஆலோசனைகளை காவல்துறை தலைமைக்கு வழங்கிய நிலையில்,  ரவுடிகள் மீதான கண்காணிப்புகளை இப்போதே போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஒவ்வொரு  காவல் நிலையங்களிலும் திருந்தி வாழும் ரவுடிக்களின் விபரங்கள்  சேகரிக்கப்பட்டு, அவர்கள் மீது 107 பிாிவில் வழக்குபதிந்து புதுச்சேரி  மாவட்ட கலெக்டர் நீதிமன்றத்தில் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.  இவர்களிடம் நன்னடத்தை குறித்த முன்னெச்சரிக்கை உறுதிமொழி பத்திரம் எழுதி  வாங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில்  விசாரித்தபோது, ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வழக்கமாக பின்பற்றப்படும்  நடைமுறைதான். புதுச்சேரியில் ரவுடிகள் வரும் பாராளுமன்ற தேர்தலின்போது  குற்ற சம்பவங்களில் ஈடுபடாமலும், பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம்  விளைக்காமலும் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக இத்தகைய நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Tags : Puducherry ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு