வறுமைக்கோடு பட்டியல் தகுதியான நபர்களை சேர்க்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

தர்மபுரி, பிப்.21:  தர்மபுரி மாவட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் தகுதியான நபர்களை சேர்க்க வேண்டுமென வலியுறுத்தி நல்லம்பள்ளி சேசம்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகன் சிவக்குமார், தர்மபுரி மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் 251 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராமங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களில் சிலருக்கு பிபிஎல்(பிளோ பவர்ட்டி லைன்) தேர்வு நம்பர் தவறுதலாக உள்ளது. இதில், வசதி படைத்தவர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்பாக, நல்லம்பள்ளி ஊராட்சியில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் மக்களின் பெயர் பட்டியலில் 5 ஏக்கர் நிலம், அரசு ஊழியர், 2 பங்களா அடங்கிய நபரின் பெயர் தான் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் தகுதியான நபர்கள் பட்டியலில் சேர்க்கப்படாத நிலை உள்ளது. எனவே தர்மபுரி மாவட்டத்தில் தகுதியான நபர்களை வறுமைக்கோட்டிற்கு கீழ் பட்டியலில் மாவட்ட நிர்வாகம் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More