×

கடத்தூர் அருகே 237 பேருக்கு தாலிக்கு தங்கம்

கடத்தூர், பிப்.21: கடத்தூர் அருகே, பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்டத்தில், பெண்களுக்கு அரசு சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி ஒடசல்பட்டி கூட்ரோட்டில் நேற்று நடைபெற்றது. விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கலந்து கொண்டு பேசுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் தற்போது வரை 21,451 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ₹73.39 கோடியாகும். இன்று(நேற்று) 2400 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது,’ என்றார். விழாவில் கடத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 237 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார். 

Tags : Thalai ,Kadathur ,
× RELATED குழந்தையுடன் தாய் மாயம்