×

பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே சாக்கடையை தூர்வார கோரிக்கை

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.20: பாப்பிரெட்டிப்பட்டி, பஸ் ஸ்டாண்ட் அருகே, சாக்கடையில் கழிவு நீர் தேங்கி உள்ளதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, சாக்கடையை தூர்வார கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில், 15 வார்டுகள் அடங்கி உள்ளது. சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
 இங்குள்ள பஸ் ஸ்டாண்டில், இருந்து சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, சென்னை, திருப்பதி, திருச்சி, கோவை மற்றும் மதுரை ஆகிய இடங்களுக்கு செல்ல பஸ்கள் வந்து செல்கின்றன.இதனால், பஸ் ஸ்டாண்டிற்கு நாள்தோறும், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
அருகில் கடைகள், ஓட்டல்கள், டீ மற்றும் பல்வேறு கடைகள் உள்ளது.இதில், பஸ் ஸ்டாண்டை சுற்றி பல சாக்கடைகளில், கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.மேலும் கொசுக்கள் காணப்படுவதால் பயணிகள் முகம் சுழித்தபடி செல்கின்றனர். இது குறித்து  பேரூராட்சி அலுவலகத்தில் பயணிகள் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தேங்கிய சாக்கடையில் தூர்வாரி தூய்மைபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Sewage Dwarves ,bus stand ,Pappirippatti ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...