×

செல்போன் டவருக்கு எதிர்ப்பு

சென்னை, பிப். 15: செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டூர் கோமதி அம்மன் நகரில் 2000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.கோமதி அம்மன் நகர் குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் நிறுவன சார்பில், டவர் (கோபுரம்) அமைப்பதற்காக நேற்று முன்தினம் பணிகள் துவங்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், அப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க கூடாது. டவரில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சால், கர்ப்பிணிகள், குழந்ைதகள் ஆகியோர் பாதிக்கப்படுவார்கள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்களிடம் சமரசம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : cellphone tower ,
× RELATED செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் மறியல்