×

பெரம்பலுார் கலெக்டர் அலுவலகம் முன் மாற்றுதிறனாளிகளுக்கான பாதைகள் ஆக்கிரமிப்பு நோ பார்க்கிங்கில் 2 சக்கர வாகனங்கள் நிறுத்தும் அவலம்

பெரம்பலூர்,பிப்.12: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்  திறனாளி  களுக்கான பாதைகளை ஆக்கிரமித்து, நோபார்க்கிங்கில் இருசக்கர   வாகனங்களை நிறுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு விதிகளுக்கு உட்பட்டு   மாற்றுத் திறனாளிகளுக்கென கலெக்டர் அலுவலகக் கட்டுமானத்தின் போதே கலெக்டர்   அலுவலக நுழைவுவாயில் இடப்புறம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கலெக்டரின் காரினை இடையூறில்லாமல் நிறுத்த வசதியாக    கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலின் இடப்புறம் நோபார்க்கிங் என   பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகத்திற்கு   வருவோரால் தினமும் சாதாரணமாக மீறப்படும் விதிமீறல்களில் முதலாவதாக இருப்பது   இந்த நோபார்க்கிங் பெயர்ப்பலகை முன்பாகவே 30க்கும் மேற்பட்ட  இருசக்கர  வாகனங்களை நிறுத்துவதாகத்தான் உள்ளது.
இது கலெக்டர்அலவலக  போர்ட்டிகோவில்  தொடங்கி, மாவட்ட கருவூலத்துறை அலுவலக போர்ட்டிகோ வரை  40மீட்டர் நீளத்திற்கு  நீடித்திருக்கும். இதன் காரணமாக தங்களுக்கென  பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட  சாய்வுதளத்தை மாற்றுத்திறனாளிகள் பயன்ப டுத்த  முடியாமல்  திண்டாடி வருகின்றனர்.
மேலும் சாய்வுதளத்திற்கான  பாதை முன்  அடைத்தபடி தங்களது பைக்குகளை நிறுத்தி விட்டு  சென்று விடுகின்றனர். இதனால்  கலெக்டர்அலுவலகம் வந்தவு டன் சாய்வுதளத்தை  பயன்படுத்தி உள்ளே செல்லும்  மாற்றுத்திறனாளிகள் வெளியேறும் போது  பைக்குகளின் ஆக்கிரமிப்பால் வெளியே  செல்ல முடியாம லும், பின்னால் திரும்பி  செல்லமுடியாமலும்  திண்டாடும் நிலைதான் ஏற்பட்டு வருகிறது.
இதற்கு திங்கள்  முதல் தினந்தோறும்  பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும் போலீஸார்தான்  பைக் ஆசாமிகளை  எச்சரித்து, மாற்று இடங்களில் நிறுத்த அறிவுறுத்த வேண்டும்  என திண்டாடும்  மாற்றுத் திறனாளிகளே புலம்பி வருகின்றனர்.

Tags : Perambalur Collector ,Wheelers ,
× RELATED பெரம்பலூர் /அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு