சிறுமிகளிடம் சில்மிஷம் சிறுவன் உட்பட 3 ேபர் போக்ேசாவில் கைது

சென்னை, பிப். 12: சென்னை அசோக் நகர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜா (45) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், 9ம் வகுப்பு  படித்துவரும் என் மகள் வீட்டில் தூக்கிக் கொண்டிருந்தபோது, அருகில் வசித்து வரும் வாலிபர்கள் 2 பேர் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து என் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும், என்று கூறியிருந்தார்.புகாரின்படி போலீசார் வழக்கு பதிந்து அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (19) மற்றும் 16 வயது சிறுவனை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அைடைத்தனர்.

* சைதாப்பேட்டை தாடண்டர் நகர் அரசு குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜா (50). அரசு பஸ் டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுமியை நைசாக பேசி அவரது  வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி அறித்த அக்கம் பக்கத்தினர் ராஜாவை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் ராஜா  மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

× RELATED செல்லுலாய்ட் பெண்கள்