×

தேவநேயபாவாணர் பிறந்தநாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அமைச்சர்களை காக்க வைத்த எம்எல்ஏ,வால் பரபரப்பு

மதுரை, பிப். 8: தேவநேயபாவாணரின் 119வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மதுரையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இவ்விழாவில் அமைச்சர்களை எம்எல்ஏ, காக்க வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
 மதுரை சாத்தமங்கலத்தில் உள்ள தேவநேயபாவாணர் நினைவு மண்டபத்தில் அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அரசு சார்பில் நடந்த விழாவில் அமைச்சர்கள் உதயகுமார், ெசல்லூர் ராஜூ, ராஜன்செல்லப்பா எம்எல்ஏ, கலெக்டர் நடராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தேவநேயபாவாணர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். தேவநேயபாவாணர் பிறந்தநாளுக்காக காலை 9 மணிக்கு சிலைக்கு மாலை போடப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. குறித்த நேரத்திற்கு கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வந்துவிட்டனர். அதேபோன்று, அமைச்சர்கள், ஆர்பி.உதயகுமார், செல்லூர்ராஜூ ஆகியோரும் காரில் வந்தனர். காரைவிட்டு இறங்கிய அமைச்சர் உதயகுமார் மண்டபத்திற்குள் செல்லாமல் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்காக வெளியே காத்திருந்தார். ஆனால் அமைச்சர் செல்லூர் ராஜூ அதை கண்டுகொள்ளாமல், காரைவிட்டு இறங்காமல் காரில் அமர்ந்து இருந்தார். பொறுமையிழந்த உதயகுமார் உடனே மண்டபத்திற்குள் சென்று அங்குள்ள புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். பின்பு 9.30 மணிக்கு எம்எல்ஏ ராஜன்செல்லப்பா வந்தார். அவர் வந்தவுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ காரில் இருந்து இறங்கி அவருடன் சேர்ந்து சென்று சிலைக்கு மாலை அணிவித்தனர்.  
 ஒரு எம்எல்ஏவுக்காக அமைச்சர்கள் இருவரையும், சுமார் அரைமணி நேரத்திற்கு மேல் காக்கவைத்துவிட்டனரே என அதிமுக தொண்டர்கள் பேசிக்கொண்டனர்.

Tags : MLA ,ministers ,birthday ,devotee ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...