×

பட்டிவீரன்பட்டியில் விசி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பட்டிவீரன்பட்டி, பிப். 8: பட்டிவீரன்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலை இலக்கிய பிரிவு சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் மணிகண்டன் தலைமை வகிக்க, மாநில துணை செயலாளர் சக்திவேல், நகர செயலாளர் நல்லமாயன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொறுப்பாளர் காட்டுராஜா வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் நகரில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்,
அண்ணாநகரிலிருந்து அம்பேத்கர் நகர் வரை பல ஆண்டுகளாக சேதமடைந்து மண்சாலையாக காட்சியளிக்கும் சாலையை தார்ச்சாலையாக அமைக்க வேண்டும். 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் வந்து செல்லும் பட்டிவீரன்பட்டி அரசு மருத்துவமனையை நவீனப்படுத்த வேண்டும். அம்பேத்கர் நகர் மக்களுக்கு சமுதாயக்கூடம் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சரவணன் நன்றி கூறினார்.

Tags : parties ,Pattiveeranppatti ,
× RELATED ஆந்திர மாநில தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்....