×

பாகல்பட்டி- முத்தம்பட்டி செல்லும் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

தர்மபுரி, பிப்.8: நல்லம்பள்ளி அருகே பாகல்பட்டியில் இருந்து ஆஞ்சநேயர் கோயில் செல்லும் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நல்லம்பள்ளி அடுத்த பாகல்பட்டியில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவில், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு மாத பிறப்பு, அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக கோயிலுக்கு டூவீலர், கார்கள், ஆட்டோக்களில் செல்வது வழக்கம். இந்நிலையில், பாகல்பட்டியில் இருந்து முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்லும் 8 கிலோ மீட்டர் சாலை, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பாகல்பட்டி ரயில்வே பாலத்தில் இருந்து முத்தம்பட்டி வரையிலான தார்சாலை தரமாக அமைக்காததால், சிறிய மழைக்கே பல இடங்களில் குண்டும்,குழியுமாக மாறிவிட்டது. இதனால் கார்கள், லாரிகள், வேன்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதிக வாகன போக்குவரத்து உள்ள பாகல்பட்டி- முத்தம்பட்டி தார்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Parthali - Muthampatti ,
× RELATED பழநி கிரிவலப் பாதையில் சுற்றுச்சுவர்...