×

சங்கரன்கோவிலில் தர்ப்பணம் கொடுக்க சென்ற விவசாயி மாயம்

சங்கரன்கோவில், பிப். 8:  சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 7வது தெருவை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் (55). இவரது மனைவி முப்பிடாதி. கடந்த 4ம் தேதி தை அமாவாசையை முன்னிட்டு மீனாட்சிசுந்தரம், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பாபநாசத்திற்கு சென்றார். அன்று மாலை அம்பை ரயில் நிலையத்தில் இருந்து மீனாட்சிசுந்தரம், மனைவியிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது அவர் தனக்கு திடீரென உடல்நலக் குறைவாக ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை அவர் வீடு திரும்பவில்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாரா? அல்லது வேறு எதுவும் காரணமா என்பது தெரியவில்லை.  இதுகுறித்து முப்பிடாதி அளித்த புகாரின்பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED அஞ்சலகங்களில் நாளை ஆதார் சேவை நேரம் அதிகரிப்பு