×

ஏர்வாடியில் எஸ்டிபிஐ நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஏர்வாடி, ஜூன் 23:ஏர்வாடியில் நகர எஸ்டிபிஐ கட்சி சார்பில் 16வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகர துணைத் தலைவர் அலிசேக் மன்சூர் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் அகமது நவ்வி முன்னிலை வகித்தார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதி எஸ்டிபிஐ துணைத்தலைவர் ஆஷிக் வரவேற்றார். ஏர்வாடி நகர பொருளாளர் ரிஸ்வான் தொகுத்து வழங்கினார். நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா, விமன் இந்தியா மூவ்மெண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜன்னத் ஆகியோர் சிறப்புரையாற்றினர். புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர்மஸ்தான், மாவட்ட துணைத்தலைவர் முல்லை மஜித், மாவட்ட பொருளாளர் இளையராஜா, 5வார்டு கவுன்சிலர் ஹலீமா ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி எஸ்டிபிஐ கட்சி தலைவர் சேக், துணைத்தலைவர் ஆஸிக்கனி, பொருளாளர் காலித், ஏர்வாடி நகர செயலாளர் சேக்முகமது, துணைச் செயலாளர் முகைதீன், நகர செயற்குழு உறுப்பினர்கள் பஷீர்முகம்மது, காஜா பிர்தௌசி, சாமு, விமன் இந்தியா மூவ்மெண்ட் நகரத் தலைவர் ஹமிதா அக்பர், துணைத்தலைவர் மீரா ஆஷிக், பொருளாளர் காலித் பாத்திமா, துணைச்செயலாளர் ஜெசிமா, செயற்குழு உறுப்பினர் பர்ஹானா, ஷாய்புன் நிஷா மற்றும் மாவட்ட தொகுதி நகர கிளை வார்டு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

The post ஏர்வாடியில் எஸ்டிபிஐ நலத்திட்ட உதவிகள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Airwadi ,inauguration ,STPI ,City Vice President ,Aliseq Mansoor ,State General Secretary ,Ahmed Navvi ,STBI ,Dinakaran ,
× RELATED பெரம்பலூரில் எஸ்டிபிஐ கட்சியின் 16ம் ஆண்டு தொடக்க விழா