×

திசையன்விளையில் மரநாயை கொன்று சமைத்து தின்ற ஆட்டோ டிரைவர் இருவர் கைது

திசையன்விளை, ஜூன் 23: திசையன்விளை காமராஜர் பேருந்து நிலையம் எதிரே வேளாண் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் நேற்று இரவு ஆட்டோ டிரைவர்கள் அரியவகை விலங்கான மரநாயை கொன்று கறியை மட்டும் எடுத்துவிட்டு தலை, குடல் மற்றும் தோல் பகுதிகளை வேளாண் அலுவலகத்தின் முன்புள்ள டிரக்கர் ஸ்டாண்டில் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து டிரக்கர் டிரைவர்கள், நெல்லை சரக வன அலுவலகத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த வனக்காவலர் அஜித்தேவஆசீர், வேட்டை தடுப்பு காவலர் பேச்சிமுத்து ஆகியோர் மரநாயை கொன்றது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் மரநாயை வேட்டையாடி கறி சமைத்து தின்றது ஆட்டோ சங்கத் தலைவர் ஜெயக்குமார், ஆட்டோ டிரைவர் தாமரை என்பது தெரியவந்தது. இதையடுத்து வன பாதுகாப்புத் துறையினர், ஆட்டோ டிரைவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post திசையன்விளையில் மரநாயை கொன்று சமைத்து தின்ற ஆட்டோ டிரைவர் இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Vector ,Office ,Vectoriavila Kamarajar ,Dinakaran ,
× RELATED நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணிகள்...