×

என்டிசி மில் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

கோவை, பிப்.7: கடந்த ஆறு மாதங்களாக இழுபறியில் இருந்த என்.டி.சி., தொழிலாளர்களின் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் கோவை என்.டி.சி தலைமை அலுவலகத்தில் நேற்று கையெழுத்தானது.
தேசிய பஞ்சாலை கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் செய்யப்படுகிறது.  கடந்த முறை கையெழுத்தான ஒப்பந்தம் கடந்த மாதம் மே மாதத்துடன் முடிந்தது.
இந்நிலையில் புதிய ஒப்பந்தத்தில் ஊதிய உயர்வு அதிகமாக இருக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
 ஆனால், கூடுதல் ஊதியம் வழங்க என்டிசி நிர்வாகம் மறுத்ததால் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி நீடித்தது.
இந்நிலையில், ரூ.1,700 ஊதிய உயர்வுடன் புதிய ஒப்பந்தம் காட்டூர் பகுதியில் உள்ள என்.டி.சி தலைமை அலுவலகத்தில் நேற்று கையெழுத்தானது.
எல்.பி.எப்., ஏ.டி.பி., சி.ஐ.டி.யு மற்றும் ஐ.என்.டி.யு.சி ஆகிய நான்கு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் என்.டி.சி தென்மண்டல நிர்வாக இயக்குனர் (பொறுப்பு) வெங்கடேஷ் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இதன் மூலமாக, தமிழகம் முழுவதிலும் உள்ள 7 ஆலைகளில் பணிபுரியும் 2,000 தொழிலாளர் பயனடைவார்கள்.
 இதுகுறித்து எல்.பி.எப் தொழிற்சங்கத்தின் பொது செயலாலர் பார்த்தசாரதி கூறியதாவது: புதிய ஊதிய உயர்வின்படி, தொழிற்சங்கங்கள் ரூ.2600 உயர்வாக கேட்டிருந்தோம்.
ஆனால் ரூ.1700 ஊதிய உயர்வு அளிப்பதாக நிர்வாகம் அறிவித்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இதன் மூலம் பண பயன்கள் 80 சதவீதம் கிடைக்கும். மீதம் வாடகைபடி உள்ளிட்டவற்றில் அடங்கும்.
 இதன் மூலமாக என்.டி.சி நிர்வாகம் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் கூடுதலாக தொழிலாளர்களுக்காக செலவிட முடியும். தற்போது கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தமானது கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதியில் இருந்தே செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இவ்வாறு பார்த்தசாரதி கூறினார்.

Tags : NDC ,mill workers ,
× RELATED விலை அதிகரிப்பை தடுக்க என்.டி.சி...