×

மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா

ஈரோடு, பிப். 7:   ஈரோடு கனிராவுத்தர் குளம் அடுத்த சின்னசேமூரில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதேபோல் இந்த ஆண்டுக்கான பொங்கல் திருவிழா கடந்த 20ம் தேதி பூச்சாட்டு, கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த 5ம் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனை வழிப்பட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று பக்தர்கள் வீடுகளில் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு படைத்து வழிப்பட்டனர்.
 கனிராவுத்தர் குளம் பகுதியில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி வந்தனர். இதில் கத்தி, பறவைக்காவடி, தொட்டில் உள்ளிட்டவற்றை குத்தியபடி கிரேன் வாகனத்தில் தொங்கியபடி  கோவிலுக்கு ஊர்வலமாக வந்து, அம்மனை வழிபட்டனர். இன்று (7ம் தேதி) காலை 7 மணிக்கு கம்பம் எடுத்தலும் பகல், 12 மணிக்கு உற்சவர் திருவீதி உலாவும், அதனையடுத்து மஞ்சள் நீராட்டும் நடக்கிறது. இதையடுத்து விழா மறுபூஜையுடன் நிறைவு பெறுகிறது.

Tags : Mariamman Temple Pongal Festival ,
× RELATED மாரியம்மன் கோயில் பொங்கல் விழா...