×

சேலம் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் கண்காணிப்பு தீவிரம்

சேலம், பிப். 7: சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களை மாசுகட்டுப்பாடு அதிகாரிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.  தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 1ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிளாஸ்டிக் ெபாருட்களை பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும் தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி கடைகளுக்கு அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.  அந்தந்த மாவட்ட கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து இனிப்பகங்கள், உணவகங்கள், பேக்கரிக்கள், செல்போன், ஜவுளி கடைகள், வணிக நிறுவனங்கள், டீக்கடைகளில் தணிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் கம்பெனிகள் இயங்கி வருகிறது. இந்த கம்பெனிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்க கூடாதும் எனவும், தயாரித்தால் சீல் வைக்கப்படும் எனவும் மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர். மேலும், அந்த கம்பெனிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுகிறதா?  என்பதை மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இது குறித்து மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் கம்பெனிகளுக்கு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்க கூடாது என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதையும் மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி செய்தால், அந்த கம்பெனியின் மின் இணைப்பை துண்டித்து, சீல் வைக்கப்படும். தொடர்ச்சியதாக பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் கம்பெனிகளை ஆய்வு செய்து வருகிறோம்,’’ என்றனர்.     

Tags : plastics manufacturing companies ,saline counties ,
× RELATED ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி