×

கொங்கணாபுரத்தில் 5 இடங்களில் திமுக ஊராட்சி சபை கூட்டம்

இடைப்பாடி, பிப்.7:   கொங்கணாபுரம் பகுதியில் 5 இடங்களில், திமுக ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார். கொங்கணாபுரம் ஒன்றியத்தில் எருமப்பட்டி, கச்சுப்பள்ளி, கோரணம்பட்டி, குருமப்பட்டி, தங்காயூர் ஆகிய 5 ஊராட்சி பகுதிகளில், திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பரமசிவம் வரவேற்றார். மாவட்ட துணைசெயலாளர் சம்பத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எடப்பாடி முருகேசன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கொங்கணாபுரம் சுப்ரமணியம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தார்.  கூட்டத்தில் மாவட்ட ெநசவாளரணி அமைப்பாளர் ஆறுமுகம், ஊராட்சி செயலாளர்கள் பழனிசாமி, அண்ணாமலை, ராணி பெரியதம்பி, மணி, வேலு, இடைப்பாடி நகர செயலாளர் பாஷா, இடைப்பாடி ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, கொங்கணாபுரம் பேரூர் செயலாளர் அர்த்தனாரீஸ்வரன், கொங்கணாபுரம் அருணாசலம், பாண்டியன், நிர்மலா வைத்தி, ஊராட்சி செயலாளர்கள் பழனிசாமி, அண்ணா துரை, பெரியதம்பி, மணி வேலு, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : DMK Council ,meeting ,places ,Konkanapura ,
× RELATED தமிழ்நாட்டில் நேற்று 13 இடங்களில்...