×

மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் கேமரா பொருத்த வலியுறுத்தல்

அருர், பிப்.7: மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க ேவண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷன், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் முக்கிய போக்குவரத்து கேந்திரமாக விளங்கி வருகிறது. இந்த ரயில் நிலையம் வழயாக சேலம் மார்க்கத்தின் வழியாகவும், ஜோலார்பேட்டை மார்க்கத்தின் வழியாகவும் மொத்தம் 20 பயணிகள் ரயில் நின்று செல்கிறது. இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். அரசு விடுமுறை மற்றும் விழா கால விடுமுறை நாட்களில் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படும். இந்நிலையில், முக்கியமான மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், இதுவரை கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாமல் உள்ளது. இதனால், திருட்டு மற்றும் குற்றச்சம்பவங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, நடைமேடை மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என, ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : railway station ,Morpore ,
× RELATED ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட...