×

பெண் மீது நடவடிக்கை கோரி தர்மபுரி எஸ்பியிடம் புகார்

தர்மபுரி, பிப்7: தனியார் தொண்டு நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி, எஸ்பியிடம் புகார் மனு கொடுத்தனர். தர்மபுரி எஸ்பி மகேஷ்குமாரை சந்தித்து சர்வதேச மக்கள் உரிமைக் கழகத்தின் நிறுவனர் கவிதா ஒரு மனு அளித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது: சர்வதேச மக்கள் உரிமைக் கழகம் என்ற பதிவு பெற்ற அமைப்பை நடத்தி வருகிறோம். இதன்மூலம் ஏழை -எளிய மாணவர்களை, படிக்க வைப்பது மற்றும் விதவை பெண்களுக்கு நல உதவி செய்வது, சுய தொழில் தொடங்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி, எங்களது சர்வதேச மக்கள் உரிமை கழகத்தின் சார்பில் மாவட்ட மாநாடு நடந்தது. எங்கள் அமைப்பில் மாநில இணை செயலாளராக விஜயலட்சுமி என்பவர் பணியாற்றி வந்தார். தர்மபுரியில் எங்களது மாநாடு நடந்த போது, பொதுமக்களுக்கும்-விஜயலட்சுமிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, விஜயலட்சுமியை நாங்கள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்துவிட்டோம். தற்போது, விஜயலட்சுமி மீது பல புகார்கள் போலீசாரிடம் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, எங்களது சர்வதேச மக்கள் உரிமைக் கழகத்தின் நற்பெயரை கெடுக்கும் விதமாக செயல்படுவர் மீது, மாவட்ட காவல்துறை உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Dharmapuri ,SPP ,
× RELATED நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம்