கறம்பக்குடி, பிப். 7: கறம்பக்குடி அருகே கிணற்றில் ஆண் சடலம் மிதந்தது.கறம்பக்குடி அருகே விளாரிப்பட்டி கிராமத்தில் திருநாவுக்கரசு என்பவருக்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்த கிணற்றின் அருகே நேற்று காலை 10 மணியளவில் சிலர் வந்தனர். அப்போது கிணற்றை எட்டி பார்த்தபோது 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலம் மிதந்தது. தகவல் அறிந்ததும் கறம்பக்குடி போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டனர். இவர் இறந்து 2 அல்லது 3 நாட்கள் இருக்கக்கூடும் என்று தெரிய வந்தது. மேலும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், கல்லாக்கோட்டையை சேர்ந்த சேக் அப்துல்லா (50) என்பது தெரியவந்தது. இவர் மது அருந்தி குடிபோதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்தாரா, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து கிணற்றில் வீசினார்களா என்று
விசாரணை நடத்தி வருகின்றனர்.
