×

ஓசூருக்கு 10ம் தேதி ஸ்டாலின் வருகை வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஓசூர், பிப்.6:  கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி.பிரகாஷ் எம்எல்ஏ இல்லத்திருமண விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிறார்.
அவரை வரவேற்கும் வகையில் ஓசூர் ரயில் நிலையம் அருகில் திண்ணூர் பகுதியில் கோட்டை போன்று பிரமாண்ட நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதே பகுதியில் மேடையும் அமைக்கப்படுகிறது. 20 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் விதத்தில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மேற்கு மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்தும் மக்கள் சிரமமின்றி வந்து செல்ல போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. வேப்பனப்பள்ளி எம்எல்ஏ முருகன், அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாறன், நகர பொறுப்பாளர் சத்யா, பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆகியோர் வரவேற்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு வருகின்றனர். 

Tags : Stalin ,arrival ,Hosur ,
× RELATED வெயிலுக்கு தானாக எரிந்த பைக்குகள்