×

பாப்பாரப்பட்டி உண்டு உறைவிட பள்ளியில் அறிவியல் கண்காட்சி

தர்மபுரி, பிப்.6: பாப்பாரப்பட்டி கஸ்தூரிபா காந்தி பாலிகா உண்டு உறைவிட பள்ளியில் அறிவியல் மற்றும் கணித கண்காட்சி நடந்தது. தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி கஸ்தூரிபா காந்தி பாலிகா உண்டு உறைவிட பள்ளியில் அறிவியல் மற்றும் கணித கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை உதவித் திட்ட அலுவலர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார். மாணவிகள் தயாரித்த இயற்கை உரம், பூச்சிக் கொல்லி மருந்து தயாரிப்பு, தொட்டியில் நீர் நிரம்பியதை அறிவிக்கும் கருவி, ஏசி, எளிய முறையில் துளையிடும் கருவி, மின்விசிறி, அபாகஸ், பூ இதழ்களின் எண்ணிக்கையை கண்டுபிடித்தல், சாலை போக்குவரத்து விதிமுறைகள் உள்ளிட்ட படைப்புகளை உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன், ஆர்எம்எஸ்ஏ உதவி திட்ட அலுவலர் தங்கவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மதுரை வீரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சரவணன், உண்டு உறைவிட பள்ளி தாளாளர் சீட்ஸ் சரவணன், பள்ளி தலைமையாசிரியை மஞ்சுளா தேவி, மங்கையர் கரசி ஆகியோர் பார்வையிட்டு பாராட்டினர். ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியை சாந்தி, சங்கீதா, சிவசங்கரி, சந்தோஸ்மேரி, வனிதா, பிருந்தா லட்சுமி, பாக்கிய லட்சுமி, சுப்புலட்சுமி, ராஜம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Papparapatti ,science exhibition ,boarding school ,
× RELATED திருப்பாலைக்குடி அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி