×

காடுகளை பாதுகாக்க விழிப்புணர்வு பேரணி மாணவர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி

ஸ்ரீபெரும்புதூர், பிப்.6: கோடைக்காலத்தில் வெப்பத்தத்தரல்ம் காடுகளில் தீ விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்கும் விதமாக, வனத்துறை சார்பில் மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபடுகிறது.
இதையொட்டி, பெரும்புதூர் கோட்ட வனத்துறை சார்பில் கோடை காலத்தில் தீ விபத்தில் இருந்து காடுகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் தீ தடுப்பு பயிற்சி ஒரகடம் மேம்பாலம் அருகில் நடைபெற்றது.
பேரணியை பெரும்புதூர் வனச்சரகர் செல்வகுமார் துவக்கினார்.. பேரணியில் பள்ளி மாணவர்கள், விழிப்புணர்வு பதாகையினை ஏந்தி பனப்பாக்கம் காப்பு காடு வரை சென்றனர். தொடர்ந்து கோடைக்காலத்தில், காப்பு காட்டில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை அணைப்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.வட்டம்பாக்கம் கிராம வனக்குழு தலைவர் சுரேஷ் உள்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : awareness rally students ,forests ,
× RELATED வார விடுமுறை, பள்ளி விடுமுறையை ஒட்டி...