×

மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழப்பு

 

மாமல்லபுரம், மே 20: மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பழைய மாமல்லபுரம் சாலையில் ரேஷன் கடைக்கு அருகே ஒரு டிரான்ஸ்பார்மர் உள்ளது. நேற்று மாலை ஆண் மயில் ஒன்று பறந்து சென்றபோது, டிரான்ஸ்பார்மரில் இருந்து செல்லும் மின் கம்பியில் உரசியது.  இதில், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு மயில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடி துடித்து இறந்தது.

அப்போது, அக்கம் பக்கத்தினர் செங்கல்பட்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்கழுக்குன்றம் வனக்காப்பாளர் சகுபர் சாதிக், இறந்த ஆண் மயிலை மீட்டு செங்கல்பட்டு வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.

The post மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Peacock ,Mamallapuram ,Old Mamallapuram Road ,Pooncheri, Mamallapuram ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் இசிஆர் சாலையில்...