×

நீடாமங்கலம் அருகே அன்பிற்குடையான்- லிங்கத்திடல் இடையே மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

நீடாமங்கலம்,பிப்.6:நீடாமங்கலத்திலிருந்து அரவூர் செல்லும் சாலையில் அன்பிற்குடையானிலிருந்து லிங்கதிடல் செல்லும் மோசமான சாலை குண்டும், குழியுமான  மோசமான சாலையால் வாகனஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனை சீரமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா கொரடாச்சேரி ஒன்றிய மாகவும்,வலங்கைமான் தாலுகா மற்றும் ஒன்றியம் இணையும் சாலையாக உள்ளது. அரவூர் ஊராட்சி அன்பிற்குடையானிலிருந்து அரசமங்கலம் வழியாக லிங்கதிடல் கிராமத்திற்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை போடப்பட்டது.அந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கப்பிகள் புரண்டு சில இடங்களில் மண்சாலையாகவும் மாறியுள்ளது.இந்த சாலையில் நீடா மங்கலம், பயித்தஞ்சேரி, அன்பிற்குடையான், அரவூர்,அரசமங்கலம்,லிங்கதிடல் விவசாயிகள் தங்கள் நிலங்களை சாகுபடி செய்ய இரு சக்கர வாகனங்களில் பெரும்பாலும் செல்கின்றனர்.அரசமங்கலம்,லிங்கதிடல் மக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகள் கப்பிகள் புரண்டு உள்ள இந்த மோசமான சாலையில் தான் நீடாமங்கலம், மன்னார்குடி, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சைக்கிள், பைக்கில் வந்து செல்லவேண்டிய நிலையில் உள்ளனர்.இரவு நேரங்களில் மின்வசதி இல்லாததால் அங்கு நடமாடும் விஷஜந்து களுக்கு பயந்து செல்ல வேண்டியுள்ளது.மோசமான சாலையாகவும் மேடு பள்ளமான சாலையாகவும் இருப்பதால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி அருகில் உள்ள வாய்க்காலில் விழுந்து காயங்களுடன் செல்கின்றனர்.பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் வலங்கைமான் ,கொரடாச்சேரி ஒன்றிய இணைப்பு சாலை என்பதால் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.எனவே அப்பகுதி மக்கள் நலன் கருதி  இந்த சாலையை சீரமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,road ,Anamadutiyan-Lingathathalai ,Neidamangalam ,
× RELATED கனகம்மாசத்திரம் சாலையில் வேரோடு...