×

4 பேர் சிறுவர்கள் சோழவந்தான் அருகே ஆபத்தான தரைப்பாலம்

சோழவந்தான், பிப்.3: மதுரை சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள வஉசி தெரு போக்குவரத்து நிறைந்த முக்கிய வீதியாகும். பள்ளி வாசல், தபால் நிலையம் மற்றும் அதிக மக்கள் செல்லும் இவ்வீதிக்கு குறுக்கே 4அடி அகலம் கொண்ட கழிவுநீர் வாய்க்கால் மற்றும் அதன் மேல் தரைப்பாலம் சில ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி சார்பில் கட்டப்பட்டது. தற்போது இந்த பாலத்தின் நடுவில் சேதமடைந்து விரிசலாகி கான்கீரிட் கம்பிகள் வெளியே நீட்டி உள்ளதால் பாலத்தை கடந்து செல்லும் போது அடிக்கடி விபத்தில் சிக்கி பலர்காயமடைந்து வருகின்றனர்.இதன் எதிரில் அங்கன்வாடி மையம், அரசுப்பள்ளி உள்ளதால் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து முன்னாள் 9வது வார்டு கவுன்சிலர் துரைப்பாண்டி கூறுகையில்,‘‘ சில ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி சார்பில் கட்டப்பட்ட இப்பாலம் நடுவில் சேதமாகி கம்பிகள் வெளியில் நீட்டியபடி உள்ளதால், நடந்து செல்பவர்களும், டூவீலரில் செல்பவர்களும் தினமும் விழுந்து காயமடைகின்றனர். இதனருகில் குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளதால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. பாலத்தை சீரமைக்க பலமுறை யூனியன் அலுவகத்தில் மனு கொடுத்தும் பலனில்லை. எனவே, மதுரை  மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : children ,land ,Cholavanthan ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...