×

கம்பளி விற்பனை ேஜார் பாப்பாரப்பட்டி சந்தையில் சுங்க கட்டணத்தை குறைக்க கோாிக்கை

தர்மபுரி, பிப்.5: பாப்பாரப்பட்டி சந்தையில் சுங்க கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி, கலெக்டரிடம் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பாப்பாரப்பட்டி இடைக்குழு சார்பில், சக்திவேல் என்பவர், நேற்று தர்மபுரி கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: பாப்பாரப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், 2019-20ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கான வாரச்சந்தை, தினசரி மார்க்கெட்டில் வரலாறு காணாத அளவிற்கு சுங்க கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு வரும் தலைச்சுமைக்கு ₹20, சைக்கிள் சுமை, விறகு சுமை, மாடு, ஆடு, கோழி, தக்காளி கூடை ஆகியவற்றுக்கு சுங்க கட்டணம் ₹20, மாட்டு வண்டிக்கு ₹25, பாரத்துடன் மாட்டு வண்டிக்கு ₹40, பலகார கடை, காய்கறி கடைக்கு ₹30 என 76 வகை இனங்களுக்கு சுங்க கட்டணம் அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களை பாதிக்கும் சுங்க கட்டணத்தை குறைத்த பின்னரே, ஏலத்தை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 450க்கும் மேற்பட்டவர்கள், கடந்த 10 ஆண்டுகளாக கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களாக பணியாற்றி வருகிறோம். தினக்கூலி அடிப்படையில் டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா, காலரா, வயிற்று போக்கு போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். வருடத்திற்கு 3 மாதங்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது. இதனால் எங்கள் குடும்பத்தினர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, எங்களுக்கு ஊதிய உயர்வும், ஆண்டு முழுவதும் வேலையும் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. டேங்க் ஆப்ரேட்டர்கள் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள 7வது ஊதியக்குழு பரிந்துரையின் படி, அரசு நிர்ணயித்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED வி.பி.எப் கட்டண பேச்சுவார்த்தையில்...