×

திருத்துறைப்பூண்டி பகுதியில் இரவு, பகலாக எரியும் மின் விளக்குகள்

திருத்துறைப்பூண்டி, பிப்.2: திருத்துறைப்பூண்டி ஒன்றிய நகர பகுதிகளில் புயலில் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள்அமைக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. பல இடங்களில் புதிய மின்கம்பத்தில் விளக்குகள் இரவு பகலாக எரிகிறது. நகர பகுதியில் ராம மடத்தெரு, துரவுபதை அம்மன் கோயில் தெரு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகிலும் இரவு பகலாக எரிகிறது. மேலும் தாலுகா அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் இரவு பகலாக மின்விளக்கு எரிகிறது. நகர பகுதியை பொறுத்தவரை கடந்த ஓராண்டாக தனியார் நிறுவனம் தெருவிளக்கு பராமரித்து வருகிறது. இதற்கு ரூ.60 ஆயிரம் வழங்கப்படுவதாக தெரிகிறது. மின்சார கட்டணம் நகராட்சி தொடர்ந்து செலுத்துகிறது. பல இடங்களில் இரவு பகலாக எரியும் மின்விளக்குகளால் மின்சார கட்டணம் கூடுதலாகதான் ஆகும்.

 இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, நகர பகுதியில் அமைக்கப்பட்ட புதிய மின்கம்பத்தில் கம்பிகள் நான்கு கம்பிகளாக இழுத்துவிட்டனர். 5 கம்பிகள் தேவை. இதனால் எங்கெல்லாம் இரவு பகலாக மின்விளக்குகள் எரிகிறது, எரியவில்லை என்பதை கண்டறிய பணிகள் நடைபெற்று வருகிறது. தாலுகா அலுவலக வளாகத்தில் இரவு பகலாக எரியும் மின்விளக்கு எங்களது பராமரிப்பில் இல்லை என்றார்.
புயல் அடித்து 75 நாட்களாகியும் அவசரகதியில் எரியவிடப்பட்ட தெருவிளக்குகள் இன்னும் சரி செய்யாமல் உள்ளது. எனவே நகர பகுதி மற்றும் ஒன்றிய பகுதிகளில் எங்கெல்லாம் இரவு பகலாக மின்விளக்குகள் எரிவதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Tirathiripondi ,
× RELATED கோவையில் யானை மந்தைகளுடன் குட்டியானையை சேர்க்க முயற்சி!!