×

மங்கலம்பேட்டை பேரூராட்சியில் அனுமதியில்லாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

விருத்தாசலம், பிப். 2:  விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகளில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் அப்பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேரூராட்சியின் அனுமதியின்றி மின் மோட்டார்களை வைத்து பலர் குடிநீர் எடுத்து வந்தனர்.
இதனால் அனைவருக்கும் போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மங்கலம்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் தலைமையிலான பேரூராட்சி ஊழியர்கள், நேற்று முன்தினம் அப்பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அனுமதியின்றி முறைகேடாக குடிநீர் இணைப்பு வைத்திருந்த 15 வீடுகளை கண்டறிந்தனர். தொடர்ந்து அந்த 15 வீடுகளில் இருந்த மின் மோட்டார்களை பறிமுதல் செய்து, அவர்களது வீடுகளுக்கு சென்ற குடிநீர் இணைப்பை துண்டித்தனர். மேலும் பேரூராட்சியின் அனுமதியின்றி இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது
சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் எச்சரித்தார். ராமானுஜம், கோவிந்தராஜுலு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பேரூராட்சி மன்ற ஊழியர்கள் பலர் உடனிருந்தனர்.






Tags : Dismantling ,
× RELATED ஆம்புலன்சை மறித்து நிறுத்தி வாலிபர்...