×

வாழப்பாடி அருகே பள்ளி கட்டிட பணி தடுத்து நிறுத்தம்

வாழப்பாடி, பிப்.2: வாழப்பாடி அருகே பள்ளி கட்டிட பணியை ஊர் மக்கள் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து நாளை பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாழப்பாடி அருகே பெரிய கிருஷ்ணாபுரத்தில் செயல்பட்டு வரும் அரசினர் உயர்நிலைப்பள்ளியில், சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லாததால் அவதிக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து, பள்ளிக்கு புதிய கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான ஆலோசனை கூட்டத்தில், பள்ளி வளாகத்தில் தென்மேற்கு பகுதியில் வடக்கு புறம் நுழைவு வாயில் வைத்து கட்ட முடிவு செய்துள்ளனர்.

ஆனால், அதிமுக நிர்வாகிகள் ஆலோசனையின் பேரில், நேற்று முன்தினம் மாலை வடமேற்கு பகுதியில் கிழக்கு நுழைவு வாயில் வைத்து கட்ட அளவீடு செய்து, பொக்லைன் மூலம் வேலையை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊர் மக்கள் விரைந்து சென்று, பணியை தடுத்து நிறுத்தினர். மேலும், அதிமுக நிரவாகி இளங்கோவனிடமும் கலந்தாலோசித்தனர். இதுதொடர்பாக வரும் 3ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) பேசி முடிவு செய்து கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். அன்று பேசி முடிவு செய்த பிறகே மேற்கொண்டு கட்டிட பணிக்கு ஒத்துழைப்போம் என ஊர்மக்கள் தெரிவித்தனர்.

Tags : Vaddapadi ,
× RELATED வாழப்பாடி அருகே கிராமத்தில் சிறுத்தை புகுந்ததாக வதந்தி