×

பாலக்கோடு அருகே பொது வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

பாலக்கோடு, பிப்.2: பாலக்கோடு அருகே பெல்ரம்பட்டி கிராமத்தில், முன்னாள் அதிமுக பிரமுகர் கோவிந்தராஜ் என்பவர் பொது வழியை ஆக்கிரமிப்பு செய்து, கட்டடடம் கட்டி வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள், நேற்று முன்தினம் ெபல்ரம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்ேபாது, பெல்ரம்பட்டி முக்கிய சாலையில் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ேவண்டும். இலையெனில், இரண்டு சமூகத்தை சேர்தவர்களிடையே கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த, மாரண்டஅள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் ேபச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Demonstrators ,Balakode ,
× RELATED முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்