×

ஜிப்மரில் காவலாளிகளை தாக்கி பொருட்களை சேதப்படுத்திய கும்பல்

புதுச்சேரி, பிப். 1:  ஜிப்மரில் செக்யூரிட்டிகளை தாக்கி பொருளை சேதப்படுத்திய 3 பேர் கும்பலை கோரிமேடு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
 புதுவை கோரிமேட்டில் ஜிப்மர் மருத்துவமனை உள்ளது. இங்கு ஒவ்வொரு பிரிவுக்கும் தனியார் செக்யூரிட்டி குழுக்கள் ஒப்பந்த முறையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஜிப்மர் அவசர சிகிச்சை பிரிவிலும் செக்யூரிட்டிகள் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 அதன்படி 29ம்தேதி அந்த பகுதியின் செக்யூரிட்டி குழு தலைவரான கடலூர், பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்த சாமுவேல் (48) உள்ளிட்ட சிலர் பணியில் இருந்துள்ளனர். அப்போது அங்கு அவசர சிகிச்சை பிரிவில் விபத்தில் சிக்கி அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினரான கல்லூரி மாணவர் அரவிந்த்தை பார்க்க வந்த 3 பேரை செக்யூரிட்டிகள் தடுத்துள்ளனர்.

 தங்களால் அங்கு சிகிச்சை பணிகள் பாதிக்கப்படும் என அவர்களை செக்யூரிட்டிகள் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சாமுவேல் உள்ளிட்ட 3 செக்யூரிட்டிகளையும் அசிங்கமாக திட்டி தாக்கியதோடு அங்கிருந்த இசிஜி மிஷனையும் உடைத்து சேதப்படுத்தினார்களாம்.
 இதுகுறித்து கோரிமேடு காவல் நிலையத்தில் சாமுவேல் முறையிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் சம்பவ
இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், செக்யூரிட்டி குழுவினரை தாக்கி பொருட்களை சேதப்படுத்தியது மதிவாணன், ராம்குமார் மற்றும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : guards ,Jibbar ,
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ