×

நேதாஜி பை-பாஸ் சாலையில் பாதாள சாக்கடை திட்ட மூடிகளால் விபத்து அபாயம்

தர்மபுரி, ஜன.31:  தர்மபுரி நேதாஜி பை-பாஸ் சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்ட குழிகளின் மூடிகளால், வாகன ஓட்டிகள் தினசரி விபத்தில் சிக்கி வருகின்றனர்.தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலையில், ராமாக்காள் ஏரி அருகே தொடங்கி நேதாஜி பைபாஸ் சாலையில், அரசு மருத்துவமனை வரை நெடுஞ்சாலையின் இருபுறமும் பாதாள சாக்கடை குழாய்கள் செல்கின்றன. இக் குழாய்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளை இணைத்து, திருப்பத்தூர்- அரூர் பிரிவு சாலை அருகே பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் வரை செல்கின்றன. இந்நிலையில், ராமக்காள் ஏரி முதல் நேதாஜி பை-பாஸ் சாலையில் அரசு மருத்துவமனை வரையிலான நெடுஞ்சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை தொட்டிகள் மீது, வாகனங்கள் தொடர்ந்து செல்வதால், பழுது ஏற்பட்டதாகக் கூறி,  கடந்தமாதம் இந்த தொட்டிகளை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
 இப்பணிகள் முடிவுற்ற பின்பு, பாதாளச் சாக்கடை தொட்டிகளின் மூடிகள் தற்போதுள்ள சாலையைக் காட்டிலும் சுமார் 1 அடி வரை உயரமாக அமைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனையிலிருந்து நான்கு ரோடு வரை 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல், நெடுஞ்சாலை முழுவதும் 10 முதல் 15 அடி இடைவெளியில் இத் தொட்டிகள் சீரமைக்கப்பட்டு மூடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே சாலையை விட ஒரு அடி உயரமாகவே உள்ளன. இதனால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பாதாள சாக்கடை பணிகள் நிறைவுற்று ஒரு மாதத்துக்கு மேலாகியும், இவை சீர் செய்யப்படாமல் உள்ளன. இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலக நேரங்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஏற்கனவே நேதாஜி பை-பாஸ் சாலையில் இருபுறமும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர், மளிகைக் கடைகள், வணிக வளாகங்கள் உள்ளது. இந்நிலையில், இந்த பாதாள சாக்கடை தொட்டி மூடிகளால், மேலும் நெரிசல் அதிகரித்து விபத்துகள் அவ்வப்போது நிகழ்கின்றன. எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, விபத்துகளை தவிர்க்க, பாதாள சாக்கடை ெதாட்டிகள் அமைக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : underwriting project closures ,Netaji Pi-Pass Road ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா