×

பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் மின் விளக்குகள் எரியாததால் மக்கள் அவதி

பாப்பிரெட்டிப்பட்டி, ஜன.30: பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில், மின் விளக்குகள் எரியாததால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் அடங்கி உள்ளது. சுமார் 17 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் உள்ள மின் விளக்குகள் சரிவர எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் பயணிகள் வர சிரமப்படுகின்றனர்.  பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டிற்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர், கோவை, மதுரை, திருச்சி, சென்னை, திருப்பதி, கர்நாடகா, கேரளா ஆகிய இடங்களுக்கு செல்ல பஸ்கள் வந்து செல்கின்றன.

மேலும், சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் இரவு முழுவதும் பஸ்சுக்காக பயணிகள் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்க வேண்டி உள்ளது. மேலும், மின் விளக்கு எரியாததால் ஒரே இருட்டாக காணப்படுகிறது. இதனால் திருட்டு பயம் ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை பொது மக்கள் தகவல் கொடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன்கருதி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா