×

கும்மிடிப்பூண்டியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கும்மிடிப்பூண்டி, ஜன.30: கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் சுகாதார நிலையத்தில் மத்திய அரசின் பெண் குழந்தைகள் காப்போம், ‘பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். டாக்டர்கள் லோகேஷ், பானுபிரியா, தென்றல், சுகாதார ஆய்வாளர்கள் சம்பந்தம், சுகுமார், முரளிதரன், நேசமுரளி முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி நல திட்ட அலுவலர் பத்மாவதி ஆகியோர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வியில் பெற்றோரின் பங்கு, பெண் குழந்தைகளின் கல்வியால் ஏற்படும் பயன்கள் குறித்து சிறப்புரையாற்றினர்.பின்னர், சிறந்த முறையில் குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்வில் ஈகுவார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள், பெண்கள் பலர் பங்கேற்றனர்.  முடிவில் சுகாதார அதிகாரி சுப்பிரமணி நன்றி கூறினார்.

Tags : Women's Safety Awareness Camp ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் வாகன நெரிசல்: பக்தர்கள் அவதி