×

குப்பை தொட்டியில் மனித உடல்பாகங்கள்

 

அம்பத்தூர், மே 27: அயனாவரம் கான்ஸ்டபிள் சாலை அருகே, ஒரு தனியார் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு குப்பை தொட்டியில், நேற்று தூய்மை பணியாளர்கள் குப்பையை அகற்ற வந்தபோது, அதில் மனித மண்டை ஓடு, கை, கால்களின் எலும்புகள் கிடப்பது தெரிந்தது. இதுகுறித்து ஐ.சி.எப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஐசிஎப் போலீசார், அந்த உடல்பாகங்களை மீட்டு விசாரித்தனர். அதில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், ஐ.சி.எப் மருத்துவமனையில் வேலை செய்யும் 5 டாக்டர்கள் தங்கி இருப்பதாகவும், அவர்கள் செய்முறை பயிற்சிக்கு வழங்கிய எலும்பு கூடுகளை குப்பை தொட்டியில் வீசியது ெதரியவந்தது. இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post குப்பை தொட்டியில் மனித உடல்பாகங்கள் appeared first on Dinakaran.

Tags : Ampathur ,Ayanavaram Constable Road ,Dinakaran ,
× RELATED பீடி தர மறுத்ததால் ஆத்திரம் தலையில்...